காதலனுடன் இலங்கைக்கு வந்த வெளிநாட்டு பெண் பலி - முச்சக்கர வண்டிக்குள் நடந்த விபரீதம்

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த வெளிநாட்டு பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

புத்தளம் - அநுராதபுரம் வீதியின் கருவலகஸ்வெவ 6ஆம் மைல்கல் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் வெளிநாட்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று பிற்பகல் ஏற்பட்ட விபத்தில், ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த குரே ஜுபிஸ் எனா மரியா என்ற 36 வயதான பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

அவர் தனது ஸ்பெயின் நாட்டு காதலனுடன் இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொள்ள வந்த நிலையில் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளார்.

இந்த காதல் ஜோடி முச்சக்கர வண்டியில் கொழும்பில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணிக்கும் போது, முச்சக்கரவண்டி வீதியை விட்டு விலகியமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இந்த விபத்து ஏற்பட்ட போது வெளிநாட்டு பெண்ணே முச்சக்கர வண்டியை ஓட்டியுள்ளதாகவும், குறித்த இருவர் மாத்திரம் பயணித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இவ்வாறு பயணிக்கும் போது முச்சக்கர வண்டியை திருப்பி கொள்ள முடியாமல் வீதியை விட்டு விலகியமையினால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers