புதுவருடத்தில் கொழும்பில் பதற்றம்! வீதியால் சென்றவர் மீது துப்பாக்கி சூடு

Report Print Steephen Steephen in சமூகம்

புதுவருட தினத்தில் கொழும்பில் சற்று முன்னர் நபர் ஒருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமையால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

கொழும்பு 13 ஜெம்பட்டா வீதியில் சென்று கொண்டிருந்தவர் மீது சற்று முன்னர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவத்தில் ஒருவர் காயமடைந்தவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதியில் நடந்துச் சென்ற ஒருவரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளதுடன் அவரது கையில் காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

காயமடைந்த நபர் பாதாள உலக குழுவுடன் சம்பந்தப்பட்டவர் என தகவல் கிடைத்துள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Latest Offers