மயில் வேட்டைக்கு சென்ற இருவருக்கு ஏற்பட்ட நிலைமை

Report Print Steephen Steephen in சமூகம்

மன்னார் விடத்தல்தீவு, சவாரிகுளம் பகுதியில் மயில்களை வேட்டையாட சென்ற இரண்டு பேரை மன்னார் விசேட அதிரடிப்படை முகாம் அதிகாரிகள் கைதுசெய்துள்ளதாக அடம்பன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் ஒரு மயிலை கொன்று விட்டு, மற்றுமொரு மயிலை வேட்டையாட காட்டில் சுற்றிக்கொண்டிருந்த போது, துப்பாக்கியுடன் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

பிரதேசத்தில் மயில் வேட்டை நடப்பதாக விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் இந்த சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து ஒரு கட்டுத்துவக்கு, வெடிகளை தயாரிக்க பயன்படுத்தப்படும் ஈயத்துண்டுகள், கோடையிட் வெடி மருந்து, தடை செய்யப்பட்ட 11 அங்குல நீளமான கத்தி, வேட்டையாடப்பட்ட மயில் என்பவற்றை அதிரடிப்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் இன்று மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளனர்.