திருகோணமலையில் பொலிஸாரிடம் வசமாக சிக்கிக் கொண்ட பெண்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - சம்பூர், தங்கபுரம் பகுதியில் உள்ள வீட்டிலிருந்து கசிப்பு காய்ச்சுவதற்கு பயன்படுத்தப்படும் கோடா 30 லீற்றரை இன்று பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இதன்போது அந்த வீட்டின் உரிமையாளரான 26 வயதுடைய பெண் ஒருவரையும் சம்பூர் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த பெண் தொடர்பில் பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதன் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே அந்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட பெண்ணை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்துள்ளதாகவும், அவரை மூதூர் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகவும் சம்பூர் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

Latest Offers