பிரபல பாடசாலையின் கட்டிட பணிகளை இடை நிறுத்துமாறு நீதிமன்றம் உத்தரவு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - கிண்ணியா அல் அக்ஸா தேசிய பாடசாலையின் கட்டிட நிர்மாண பணிகளை நிறுத்துமாறு திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவினை இன்று விதித்துள்ளது.

கிண்ணியா அல் அக்ஸா தேசிய பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்டு வந்த கட்டிட நிர்மாண வேலைகள் அனைத்தும் முடிவடையும் தருவாயில் மற்றோருவருக்கு ஒப்பந்தத்தை ரத்து செய்து, பிரிதொரு கட்டிடமொன்றினை வழங்கியமை தொடர்பில் முகமது பாரூக் முனீஸ் என்பவர் தாக்கல் செய்த வழக்கிற்கமைய குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த வழக்கு திருகோணமலை மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.பீ.முகைதீன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது ஒப்பந்தம் தொடர்பான சரியான தகவல்களை நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்கும் வரை கட்டிட நிர்மாண பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Latest Offers