கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற உத்தரதேவி மோதியதில் 27 மாடுகள் பலி!

Report Print Steephen Steephen in சமூகம்

வடக்கு தொடருந்து பாதையில் கிளிநொச்சி, முருகண்டி பகுதியில் மாடுகள் கூட்டம் மீது தொடருந்து மோதியதில் பல மாடுகள் உயிரிழந்துள்ளன.

இந்த விபத்தில் 27 மாடுகள் உயிரிழந்துள்ளன. நேற்றிரவு கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற உத்தர தேவி தொடருந்து, மாடுகள் மீது மோதியுள்ளது.

கிளிநொச்சியில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக, பல விலங்குகள் பிரதேசத்தில் உள்ள வீதிகள் மற்றும் தொடருந்து பாதையில் தங்கியிருப்பதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தொடருந்து பாதையில் காணப்பட்ட மாடுகள் மீதே தொடருந்து மோதியுள்ளது.