ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற சத்தியப்பிரமான நிகழ்வு

Report Print Mohan Mohan in சமூகம்

2019 ம் ஆண்டுக்கான அரச அதிகாரிகளின் சத்தியப்பிரமாண நிகழ்வு நாடளாவிய ரீதியில் அரச திணைக்களங்களில் இன்று இடம்பெற்றுள்ளது.

அந்த வகையில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக அதிகாரிகள் இன்று காலை சத்தியப்பிரமாணம் செய்துகொண்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த நிகழ்வு மாவட்ட பதிவாளர் ஜெ.கோபிநாத் தலைமையில் பிரதேச செயலக அதிகாரிகள் அனைவரும் இந்த ஆண்டுக்கான சத்தியப்பிரமாணத்தை மேற்கொண்டுள்ளனர்.

மேலும் இதனை தொடர்ந்து பிரதேச செயலக வளாகத்தில் மரநடுகை நிகழ்வொன்றும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers