9 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த மாமா

Report Print Steephen Steephen in சமூகம்

பதுளை மாவட்டம் கந்தகெட்டிய பொலிஸ் பிரிவில் போப்பிட்டிய, மயிலகஸ்தென்ன பிரதேசத்தில் 9 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய உறவினர் ஒருவரை பொலிஸார் இன்று காலை கைது செய்துள்ளனர்.

கந்தகெட்டிய பிரதேசத்தை சேர்ந்த 33 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர், பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமியின் மாமா எனவும் சிறுமியை ஏமாற்றி சந்தேக நபர் இந்த குற்றச் செயலை செய்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் பதுளை நீதவான் முன்னலையில் ஆஜர்ப்படுத்தப்பட்டு எதிர்வரும் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுமி சம்பந்தமான மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் குறித்து கந்தகெட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers