சாதனை படைத்த தமிழ் மாணவிகளை தேடிச் சென்ற முக்கியஸ்தர்

Report Print V.T.Sahadevarajah in சமூகம்

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேற்றின்படி காரைதீவு கோட்டத்தில் கலைத்துறையில் இரு மாணவிகள் 3 ஏ பெற்று சாதனை படைத்துள்ளனர்.

இரு தமிழ் மாணவிகளையும் காரைதீவு பிரதேசசபை தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் வீடு தேடி சென்று பரிசு வழங்கி பாராட்டியுள்ளார்.

வடிவேல் துஸ்யந்தினி என்ற மாணவி கலைத்துறையில் 3 ஏ பெற்று அம்பாறை மாவட்டத்தில் 6ஆம் நிலையிலுள்ளார்.

குறித்த மாணவி துஸ்யந்தினியை காரைதீவு பிரதேசசபை தவிசாளர் கி.ஜெயசிறில் இன்று வீட்டிற்கு சென்று பாராட்டியுள்ளார்.

9 பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் 3ஆவது புத்திரியான மாணவி துஸ்யந்தினி எதிர்காலத்தில் சட்டத்தரணியாக வர வேண்டும் என்பதை இலக்காக கொண்டவர்.

இதேவேளை 3 ஏ பெற்ற மற்றுமொரு மாணவியான சூரியகுமார் கீர்த்திகாவையும் வீடு தேடி சென்று தவிசாளர் ஜெயசிறில் பாராட்டியுள்ளார்.

Latest Offers