பொலிஸ் நிலையத்தில் கைவரிசையை காட்டிய பெண்!

Report Print Vethu Vethu in சமூகம்

ஹோமாகம பிரதேசத்திலுள்ள பொலிஸ் நிலையத்தில் விசாரணைக்கு வந்த போது பொலிஸ் அதிகாரியின் கையடக்க தொலைபேசியை பெண் ஒருவர் திருடியுள்ளார்.

பொலிஸ் நிலையத்தில் மோதிக்கொண்ட இரண்டு பெண்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

ஒரு பெண் மற்றுமொரு பெண் மீது பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அந்த முறைப்பாட்டிற்கு அமைய இரண்டு பெண்களை பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து அதிகாரி விசாரணை மேற்கொண்டுள்ளார்.

இதன் போது மேசை மீது வைக்கப்பட்டிருந்த உயர் அதிகாரியின் கையடக்க தொலைபேசியை காணவில்லை. அந்தப் பகுதியில் தேடிய பொலிஸ் அதிகாரி இன்னும் ஒரு பொலிஸ் அதிகாரியிடம் தனது இலக்கத்திற்கு அழைப்பொன்றை மேற்கொள்ளுமாறு குறிப்பிட்டுள்ளார்.

விசாரணைக்கு வந்த பொலிஸ் அதிகாரியின் பையில் இருந்து கையடக்க தொலைபேசியின் சத்தம் கேட்டுள்ளது. இதனை பார்த்து பொலிஸ் அதிகாரி அதிர்ச்சியடைந்துள்ளார்.

பின்னர் அந்த பெண்ணின் பைக்குள் இருந்து கையடக்க தொலைபேசி மீட்கப்பட்டுள்ளது.

கையடக்க தொலைபேசி இருந்த பையின் உரிமையாளர் மிகவும் வெட்கமடைந்து அவ்விடத்தை விட்டுச் சென்றுள்ளார்.

Latest Offers