புத்தாண்டை முன்னிட்டு வவுனியாவில் சிறப்பு பூஜை வழிபாடுகள்

Report Print Thileepan Thileepan in சமூகம்

புத்தாண்டை முன்னிட்டு வவுனியா இந்து ஆலயங்கள் மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.

அந்தவகையில் வவுனியா கந்தசாமி ஆலயத்தில் ஆலயத்தின் பிரதம குரு தலைமையில் விசேட பூஜைகள் இன்றைய தினம் இடம்பெற்றன.

மேலும், வவுனியா குடியிருப்பு தூய ஆவியானவர் ஆலயத்தில் புதுவருட திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டு விசேட ஆராதனைகளும் இடம்பெற்றுள்ளன.

இதன்போது அதிகாலை 12 மணிக்கு புதிய ஆண்டை வரவேற்றும் இந்த ஆண்டு சிறப்பானதாக அமைய வேண்டியும் வழிபாடுகள் நடத்தப்பட்டன.

இந்த வழிபாடுகளில் பலரும் கலந்து கொண்டு 2019ஆம் ஆண்டை வரவேற்று வழிபட்டதுடன் வாழ்த்துக்களையும் பரிமாறிக் கொண்டுள்ளனர்.

Latest Offers