தமிழ் மக்களின் தலைமைகள் பொறுப்புணர்வுடன் நடந்து கொள்ள வேண்டும்: டக்ளஸ்

Report Print Yathu in சமூகம்

தமிழ் மக்களின் தலைமைகள் ஒரு பொறுப்புணர்வுடன் நடந்து கொள்வதன் மூலமே தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இலங்கை ரயில்வே திணைக்களம் ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து ஏற்பாடு செய்த வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களை இன்று பிற்பகல் 2மணிக்கு கிளிநொச்சியில் வைத்துக் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, இன்று அல்லது நாளை ஜனாதிபதியை சந்தித்து வடக்கு மாகாண ஆளுனர் தொடர்பில் கலந்துரையாடவுள்ளேன்.

ஆளுனர் தொடர்பில் ஜனாதிபதியே முடிவுகளை எடுக்க வேண்டும் என்றும் அரசியல் கைதிகள் தொடர்பில் கேட்டபோது. அரசியல் கைதிகளின் விடுதலை மட்டுமல்ல, தமிழ் மக்களுக்க பல்வேறுபட்ட பிரச்சனைகள் உள்ளன.

தமிழ் மக்களினுடைய தலைமைகள் ஒரு பொறுப்புணர்வுடன் நடந்துகொள்வதன் மூலமே தமிழ் மக்களினுடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். இது எனது அனுபவத்திலிருந்து சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.

நாங்கள் ஆயுதப்போராட்டத்தில் ஈடுபட்டபோது இருந்த பிரச்சனைகள் வேறு அதனுடைய விளைவுகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் வேறு என பலபிரச்சனைகள் இருக்கின்றன என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers