புதுவருட தினத்தில் தமிழர் தலைநகரில் இடம்பெற்ற அசம்பாவிதம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை, மரத்தடி புகையிரத நிலைய வீதியில் யாசகர் ஒருவர் இன்னுமொரு யாசகரை கத்தியால் குத்திய குற்றச்சாட்டின் பேரில் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பைச் சேர்ந்த 50 வயதுடைய ராமன் அரவிந்தன் என்ற யாசகரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தளை பகுதியைச் சேர்ந்த 48 வயதுடைய ஜோன் ரொபட் என்ற யாசகரே கத்திக்குத்துக்கு இலக்காகி திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை மரத்தடி புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் வழமையாக ராமன் அரவிந்தன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில், அதே இடத்திற்கு இன்னுமொரு யாசகர் கடந்த 30 மற்றும் 31ஆம் திகதிகளில் வந்து தங்கியுள்ளார்.

புதிதாக வந்த யாசகரை அவ்விடத்திற்கு வரவேண்டாம் என ராமன் அரவிந்தன் கூறியதாகவும் அவர் தொடர்ந்து வந்து தனக்கு இடைஞ்சல் கொடுத்ததனால் கோபம் கொண்டு தான் அவரை கத்தியால் குத்தியதாகவும் கைது செய்யப்பட்ட யாசகர் ராமன் அரவிந்த் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers