உலருணவுப் பொருட்களுடன் புகையிரதம் கிளிநொச்சியை வந்தடைந்தது

Report Print Suman Suman in சமூகம்

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கக்பட்ட மக்களுக்குதெற்கில் சேகரித்த உலருணவுப் பொருட்களுடன் வடக்கு நோக்கிய புகையிரதம் இன்று கிளிநொச்சி புகையிரத நிலையத்தை வந்தடைந்தது.

கிளிநொச்சி புகையிரத நிலையத்தை வந்தடைந்த உலருணவுப் பொருட்கள் கிளிநொச்சி மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கையளிக்கப்பட்டது.

இந்த புகையிரதத்தில் மாங்குளம் புகையிரத நிலையத்தில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவும் இணைந்து கொண்டார்.

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கக்பட்ட மக்களுக்கு தெற்கில் சேகரித்த உலருணவுப் பொருட்களுடன் வடக்கு உதவும் வகையில் வடக்கு மாகாண ஆளுநரின் கோரிக்கைக்கு அமைவாக ஐனாதிபதி செயலகமும், புகையிரத திணைக்களமும் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers