சந்திரசேகரனின் 09ஆவது சிரார்த்த தினம் மலையகத்தில்

Report Print Thiru in சமூகம்

மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபக தலைவரும் முன்னாள் அமைச்சருமான அமரர் பெ.சந்திரசேகரனின் 09வது சிரார்த்த தினம் இன்று அக்கரபத்தன மன்றாசி நிசாந்தினி மண்டபத்தில் அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.

இதன்போது அமரர்.பெ.சந்திரசேகரனின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, அதிதிகளும் பொதுமக்களும் நினைவுச்சுடர்களை ஏற்றி ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தி இரங்கள் உரைகள் ஆற்றி நினைவு கூர்ந்திருந்தனர்.

இந்நிகழ்வில் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணி தலைவரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி தலைவரும் முன்னாள் கல்வி இராஜாங்க அமைச்சருமான வே.இராதாகிருஸ்ணன் கலந்துகொண்டிருந்தார்.

அவர்களுடன் மலையக மக்கள் முன்னணியின் அரசியல்துறை தலைவரும் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ.அரவிந்தகுமார், முன்னணியின் செயலாளர் நாயகம் ஏ.லோறன்ஸ், முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினரும், மலையக மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளருமான ஆர்.ராஜாராம், முன்னணியின் பிரதி செயலாளர் நாயகம் அனுசா சந்திரசேகரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.