வவுனியாவில் இருந்து வடக்கு நோக்கி சென்ற யாழ்.தேவி!

Report Print Thileepan Thileepan in சமூகம்

யாழ். தேவி புகையிரதம் வவுனியாவில் இருந்து வெள்ள நிவாரணப் பொருட்களை பெற்றுச் சென்றுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தை இன்று இலங்கை ரயில்வே திணைக்களம் ஜனாதிபதி செயலகத்துடன் இணைந்து முன்னெடுத்திருந்தனர்.

மாத்தறையில் இருந்து பயணத்தை ஆரம்பித்த யாழ்.தேவி நிவாரணப் புகையிரதம் தனது பயணத்தை வடக்கு நோக்கி ஆரம்பித்திருந்தது.

இன்று மதியம் வவுனியாவை வந்தடைந்த புகையிரதத்தில் பொது மக்களால் கையளிக்கபட்ட நிவாரண பொருட்களை வவுனியா புகையிரத நிலைய அதிபர் எஸ்.அகிலேஸ்வரன் வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers