ஹட்டனில் 50 அடி பள்ளத்தில் பாய்ந்த லொறி! ஒருவர் படுகாயம்

Report Print Gokulan Gokulan in சமூகம்

ஹட்டன் - பொகவந்தலாவ பிரதான வீதியின் கிளங்கன் பகுதியில், நேற்று இரவு லொறியொன்று 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

லொறியின் சாரதியே இதன்போது, படுகாயமடைந்துள்ளதாகவும், அவர் சிகிச்சைகளுக்காக கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கண்டியிலிருந்து ,பொகவந்தலாவிற்கு கோழி ஏற்றிச்சென்ற லொறியே, இவ்வாறு பாதையை விட்டு விலகி பள்ளத்தில் பாய்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

வேக கட்டுப்பாட்டை இழந்தமையே குறித்த விபத்திற்கான காரணமென பொலிஸார் தெரிவித்துள்ளதுடன் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.