சட்டவிரோதமாக மரை இறைச்சி வைத்திருந்தவருக்கு தண்டப்பணம் விதித்து உத்தரவு

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை - தம்பலகாமம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மரை இறைச்சியை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்ட நபரொருவருக்கு 20 ஆயிரம் ரூபாய் தண்டபணம் செலுத்துமாறு கந்தளாய் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர் தம்பலகாமம் - கல்மெடியாவ, சாமிமலை பகுதியைச் சேர்ந்த நாகராசா தர்ஷன் (23 வயது) எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தளாய் நீதிமன்ற நீதவான் திஸானி தேனபது முன்னிலையில் இன்று சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போதே குறித்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

குறித்த பகுதியில் மரை இறைச்சி விற்பனை செய்யப்பட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே 08 கிலோ மரை இறைச்சி கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது குற்றத்தை ஒப்புக்கொண்டதால் சந்தேக நபருக்கு தண்டம் விதித்து உத்தரவிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers