சாதனை படைத்த மாணவி! தென்னிலங்கை அரசியல்வாதியின் சீண்டல்! வருத்ததில் மஹேல

Report Print Vethu Vethu in சமூகம்

இம்முறை உயர்தர பரீட்சையின் கலை பிரிவில் முதலாம் இடத்தை பிடித்த மாணவி தொடர்பில் முன்னாள் கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார்.

முதலாம் இடத்தை சர்வதேச பாடசாலை மாணவி ஒருவரே பெற்றுள்ளார். அவர் சூழ்ச்சியின் மூலம் முதலாம் இடத்தை பிடித்துள்ளதாக பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இந்த கருத்து தொடர்பில் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணி வீரர் மஹேல ஜயவர்தன கருத்து வெளியிட்டுள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

அவரது டுவிட்டர் பதவில், “பந்துல குணவர்தனவின் கருத்து தொடர்பில் நான் எனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். இலவசமாக அல்லது கட்டணம் செலுத்தி கல்வி பயின்றாலும், அனைத்து சந்தர்ப்பங்களிலும் எதிர்கால சந்ததியினரை தைரியப்படுத்த வேண்டும். சித்தியடைந்த அனைத்து மாணவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். விசேடமாக அகில இலங்கை ரீதியில் ஐந்தாம் இடம்பெற்ற மாணவிக்கு எனது வாழ்த்துக்கள். சிறப்பாக செயற்பட்டுள்ளீர்கள்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.