புற்று நோயாளர்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

Report Print Navoj in சமூகம்

அகில இலங்கை மக்கள் செயல் கழகத்தின் ஏற்பாட்டில் புற்றுநோயாளர்களுக்கான உலர் உணவு பொதிகள் வழங்கும் நிகழ்வு மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்றுநோய் மற்றும் சிறுவர்நோய் பிரிவு, காசநோய் பிரிவு உள்ளிட்ட பிரிவில் தங்கி இருக்கும் நோயாளர்களுக்கு 500 ரூபா பெறுமதியான உலர் உணவு பொருட்கள் உள்ளடங்கிய 100 பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வு அகில இலங்கை மக்கள் செயல் கழகத்தின் செயலாளர் லோ.நிரோஜன் தலைமையில் நடைபெற்றுள்ளதுடன், இதன்போது கழகத்தின் பொருளாளர், கழக அங்கத்தவர்கள் என பலரும் கலந்து சிறப்பித்துள்ளனர்.

இதன் போது மேலும் கருத்து தெரிவிக்கையில்,

எதிர்வரும் காலங்களில் மட்டக்களப்பு பூராகவும் மக்களுக்கான செயற்பாடுகளை ஆரம்பிப்பதோடு கிழக்கு மாகாணம் பூராகவும் சேவையினை விஸ்தரித்து மக்களுக்கான தேவையினை பூர்த்தி செய்து கொடுப்பதே கொள்கையாக கொண்டு இயங்க இருக்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.