பிளாஸ்ரிக் பாவனையற்ற பிரதேசமாக பாசிக்குடா பிரகடனம்

Report Print Navoj in சமூகம்

பிளாஸ்ரிக் பாவனையற்ற பிரதேசமாக பாசிக்குடா கடற்கரையினை பாதுகாப்பது தொடர்பான பிரகடன நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு பாசிக்குடா சுற்றுலா அதிகார சபை விடுதியில் இன்று இடம்பெற்றுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

சூழல் பாதுகாப்பு அதிகார சபை, கோறளைப்பற்று பிரதேச சபை, மற்றும் பாசிக்குடா சுற்றுலா விடுதிகள் உரிமையாளர் சங்கம் ஆகியன இணைந்து இன்று தொடக்கம் பாசிக்குடா கடற்கரையினை பிளாஸ்ரிக் பாவனையற்ற வலையமாக பிரகடனப்படுத்தும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வேலைத்திட்டத்தினை முன்னெடுப்பதற்கு கோறளைப்பற்று பிரதேச சபை, சுற்றுலா அதிகார சபை கல்குடா பொலிசார், வனஜீவராசிகள் திணைக்களம், மின்பிடி திணைக்களம் மற்றும் இலங்கை வங்கி ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் ஆகியோர் குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கியுள்ளனர்.

எதிர்காலத்தில் முற்றாக பிளாஸ்ரிக் இல்லாத பச்சை அல்கா கடற்கரை பிரதேசமாக மாற்றுதல் என்ற கருப்பொருளை முன்னெடுத்து செல்லவுள்ளதாக இதன் போது கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் காலத்தில் பிளாஸ்ரிக் அற்ற இடமாக பாசிக்குடா கடற்கரையை மாற்றுவதே எமது குறிக்கோளாகும் என கோறளைப்பற்று தவிசாளர் சோபா ஜெயரஞ்சித் தெரிவித்துள்ளார்.