இளம்பெண்ணொருவர் செய்த மோசமான காரியம்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நான்கு இலட்சம் ரூபாயினை மோசடி செய்த இளம் பெண்ணொருவரை இம்மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க இன்று உத்தரவிட்டார்.

லைட் வீதி, கந்தளாய் பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரான பெண் ஐவரிடம் நான்கு இலட்சம் ரூபாவினை பெற்றுள்ளதோடு, பின்பு பணத்தினை ஒப்படைப்பதாக கூறி ஏமாற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிப்பதோடு, சந்தேக நபரான அப்பெண்ணுக்கெதிராக மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய கைது செய்து கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.