வீதியால் சென்ற பெண்ணிடம் சங்கிலி பறிப்பு

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியாவில் வீதியால் சென்றபெண்ணின் சங்கிலியை அறுத்துச்சென்ற சம்பவம் ஒன்று வவுனியா மயிலங்குளம் பகுதியில் நேற்றுமாலை 6 மணியளவில் நடைபெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

வவுனியாவிலிருந்து ஆசிகுளத்தில் உள்ள தனது வீடு நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற பெண் ஆசிரியர் மயிலங்குளம் பகுதியில் சென்றுகொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளில் வந்த இனம்தெரியாத இரு நபர்கள் அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை அறுத்துச்சென்றுள்ளனர்.

சம்பவத்தில் நிலை குலைந்த பெண் ஆசிரியர் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்துள்ளார். அதனால் சிறு காயங்கள் ஏற்பட்டநிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அறுத்துசெல்லபட்ட தங்கச்சங்கிலி ஒரு பவுண் மதிப்பிலானது என்று கூறப்படுகின்றது.

சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தபட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.