சாட்சியாளருக்கு அழுத்தம் கொடுத்த கடற்படை அதிகாரி

Report Print Steephen Steephen in சமூகம்

கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் இளைஞர்கள் உட்பட 11 பேர் கடத்திச் செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேக நபருக்கு தடைகளை ஏற்படுத்தியதாக கூறப்படும் கடற்படையின் நிலப் பகுதி நடவடிக்கைகளுக்கான பணிப்பாளர் ரியர் அத்மிரல் சேரசிங்கவிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் ரங்க திஸாநாயக்க முன்னிலையில், குற்றப் புலனாய்வு திணைக்களம் இன்று தகவல்களை முன்வைத்தது.

இந்த சம்பவத்தின் பிரதான சாட்சியாளரான லெப்டினட் கமாண்டர் கிறிஷாந்த வெலகெதரவுக்கு சந்தேக நபர் அழுத்தங்களை கொடுத்ததாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி செவிரட்னவிடம் சத்தியக் கடிதம் மூலம் அறிவித்துள்ளதை அடுத்து, சந்தேக நபரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.