இராணுவம் வெளியேற வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை! சாள்ஸ் நிர்மலநாதன்

Report Print Ashik in சமூகம்

மக்களுக்கு உரிய பிரதேசங்களில் உள்ள அனைத்து இராணுவத்தினரும் வெளியேர வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போது வடக்கு, கிழக்கில் இருந்து இராணுவம் வெளியேர வேண்டிய அவசியம் இல்லை என தகவல் வெளியிடப்பட்டிருந்தது.

குறித்த கருத்து தொடர்பாக ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதில் வழங்கிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

படிப்படியாக சிறு அளவு முன்னேற்றம் இருந்தாலும் மக்கள் எதிர் பார்த்த அளவு இராணுவம் மக்களின் காணிகளில் இருந்து செல்லவில்லை.

ஏற்கனவே 1980ஆம் ஆண்டுக்கு முற்பட்ட காலத்தில் இருந்த இராணுவ முகாம்களை தவிர அதற்குப் பிறகு ஏற்பட்ட யுத்தம் காரணமாக உருவாக்கப்பட்ட இராணுவ முகாம்கள் மற்றும் இராணுவத்தினர் விலகி மக்களின் ஜனநாயக வாழ்க்கைக்கு இடையூறு இல்லாத வகையில் இராணுவம் செயற்பட வேண்டும். இது தொடர்பாக ஜனாதிபதியிடமும் அரசாங்கத்திடம் கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers

loading...