திருகோணமலையில் மாான்களுக்கான உறைவிடம்!

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலை ரோட்டரிக் கழகத்தின் ஏற்பாட்டில் அவுஸ்திரேலியாவில் உள்ள தனவந்தர் ஒருவரின் உதவியுடன் மான்களுக்கான உறைவிடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை நகர சபையின் தலைவர் இராசநாயகத்தின் ஏற்பாட்டில் இந்த மான்களுக்கான உறைவிடம் அமையப்பெற்றுள்ளது.

அண்மைக்காலமாக உறைவிடமின்றி வீதிகளிலும், மைதானங்களிலும் மான்கள் அழைந்து திரிந்தன. தற்போது மான்களுக்கு உறைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் இதனை வரவேற்பதாக பொது மக்கள் தெரிவித்திருந்தனர். அதுமட்டுமல்லாது மான்களுக்கு உணவு மற்றும் குடிநீருக்கான வசதிகளும் அதற்கான கொட்டில் ஒன்றும் அமையப்பெற்றுள்ளது.

தொடர்ந்து நீர் கிடைக்கக் கூடியவகையில் நீர் தாங்கி அமைக்கப்பட்டுள்ளது. இவைகளுக்கான உணவு மரக்கறி சந்தையில் இருந்து துப்பரவு செய்யப்பட்டு புதிதாக அமைக்கப்பட்ட சீமெந்து தரையில் இடப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.