துபாயில் தமிழுக்கு கிடைத்த வெற்றி! சிறந்த கலாசாரமாக தெரிவு

Report Print Tamilini in சமூகம்

துபாயில் இடம்பெற்ற கலாசார திருவிழாவில் சிறந்த கலாச்சாரமாக தமிழ் கலாசாரம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

துபாயில் இஸ்லாமிய சமய அறநிலையத்துறை சார்பாக பன்முக கலாசார திருவிழா அங்குள்ள வணிக வளாகத்தில் இடம்பெற்றது.

இதில் அரபி, ஜேர்மன், ஸ்பானிஸ், ருமேனியா, தமிழ் உட்பட உலகம் முழுவதும் உள்ள 40 இற்கும் மேற்பட்ட கலாசார அரங்ககங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

தமிழ் அரங்கத்தில் இடம்பெற்ற திருக்குறள், தமிழ் வரலாறு, தமிழ் வளர்ச்சி, தமிழர் நாகரீகம், தமிழ் கவிஞர்கள், தமிழரின் பண்பாட்டு பொருட்கள் ஆகியவற்றை நடுவர்கள் மற்றும் பார்வையாளர்கள் கண்டு வியந்தனர்.

அது போன்று அனைத்து மொழி கலாசார அரங்கங்களையும் பார்த்து இரசித்த நடுவர்கள் சிறந்த கலாசாரமாக தமிழழைத் தெரிவு செய்து முதல்பரிசை வழங்கினர்.

இதில் வங்காள கலாசாரத்திற்கு இரண்டாவது பரிசும், எத்தியோப்பிய கலாச்சாரத்திற்கு 3 வது பரிசும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.