மரணித்து போன மனித நேயம்! உயிருடன் மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்ட நாய்

Report Print Murali Murali in சமூகம்

கூண்டில் அடைக்கப்பட்டிருந்த நாயொன்று மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் ஒன்று நீர்க்கொழும்பு கொப்பரா சந்தி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் கடந்த 31ஆம் திகதி இடம்பெற்றுள்ளது.

உயிருடன் எரிந்துகொண்டிருந்த நாயை சமூக ஆர்வலர்கள் சிலர் மீட்டு கால் நடை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். எனினும், குறித்த நாய் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளது.

இந்த சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் மீது விலங்குகள் குற்றவியல் பிரிவின் கீழ் சட்ட நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.