கொழும்பு வெள்ளவத்தை பகுதியிலும் பெருமளவான ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

Report Print Murali Murali in சமூகம்

கொழும்பு வெள்ளவத்தை ரயில் நிலையத்தில் ஒரு கிலோ 513 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு ஊழல் சுற்றிவளைப்பு பிரிவினரால் நேற்று வெள்ளவத்தை புகையிரத நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 38 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபரிடமிருந்து சுமார் 18 மில்லியன் ரூபாய் பெறுமதியான ஒரு கிலோகிராம் 513 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபரிடம் இருந்து மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை - கொழும்பு ஊழல்சுற்றிவளைப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கை வரலாற்றில் அதிகளவான ஹெரோயின் போதைப்பொருள் தெஹிவலை பகுதியில் இருந்து அண்மையில் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.