பௌத்த மத நூல் வெளியீடு குறித்து புதிய சட்டம் அறிமுகம்!

Report Print Kamel Kamel in சமூகம்

பௌத்த மத நூல் வெளியீடு தொடர்பில் புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக பௌத்த சாசன மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்...

பௌத்த மதத்தையோ அல்லது புத்தரின் நடத்தையையோ திரிபுபடுத்தும் வகையில் விளக்கங்களை அளித்தல், நூல்கள் வெளியிடுதல், காணொளி, வானொலி நிகழ்ச்சிகளை ஒளி, ஒலிபரப்புச் செய்த தடை செய்யப்பட்டுள்ளது.

இந்த சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் பௌத்த மதத்தை இழிவுபடுத்தம் வகையில் செயற்படுவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டவாக்கத் திணைக்களத்தினால் வரைவுச் சட்டம் தயாரிக்கப்பட்டு மாநாயக்க தேரர்களிடம் ஆலோசனை பெற்றுக் கொண்டு அமைச்சரவையின் அனுமதியுடன் சட்டவாக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.