லைட்ஹவுஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் மரம் நடுதலுக்கான விழிப்புணர்வு பவனி

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு லைட் ஹவுஸ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் “மரம் வளர்ப்போம் மனிதம் காப்போம்” எனும் தொனிப் பொருளின் கீழ் மரம் நடுதலை ஊக்குவிக்கும் விதத்திலான விழிப்புணர்வு நடை பவனியானது முகத்துவார வெளிச்ச வீட்டுப் பகுதியில் இடம்பெற்றது.

தற்காலத்தில் மனிதர்களின் செயற்பாடுகளால் பல மரங்கள் அழிக்கப்பட்டு வரும் நிலையில், அவற்றினால் மனித இனம் எதிர்கொள்ள இருக்கும் பேராபத்துகள் பற்றியும், மரம் நடுதலின் அவசியம் பற்றியும் மக்களுக்கு தெளிவுபடுத்தும் விதத்தில் இப்பேரணி அமைந்திருந்தது.

குறித்த விழிப்புணர்வு நிகழ்வில் முகத்துவாரம் வெளிச்ச வீட்டினையும், சூழலியல் பூங்காவினையும் அண்டிய பகுதிகளில் மரங்கள் நடப்பட்டதுடன் பொது மக்களுக்கு மரக் கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில் மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், பிரதி முதல்வர் கந்தசாமி சத்தியசீலன், லைட்ஹவுஸ் விளையாட்டுக் கழகத்தின் நிர்வாகிகள், விளையாட்டு வீரார்கள், பொது மக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.