சீனக்குடா பகுதியில் கேரளா கஞ்சாவுடன் குடும்பஸ்தர் ஒருவர் கைது

Report Print Gokulan Gokulan in சமூகம்

திருகோணமலை பிராந்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மேற்கொண்ட திடீர் சுற்றி வலைப்பில் சீனக்குடா பகுதியில் வீடொன்றில் வைத்து கேரளா கஞ்சாவுடன் ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் கல்வெல வீதி, சமன்புர சீனக்குடா பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.

குறித்த நபரை அவரது வீட்டில் வைத்து சோதனையிட்ட போது 70 கிராம் கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட நபரை குறித்த கேரளா கஞ்சாவுடன் சீனக்குடா பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளதாகவும், திருகோணமலை நீதிமன்ற நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் சீனக்குடா பொலிஸார் மேலும் தெரிவித்திருந்தனர்.

Latest Offers