வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கி வைப்பு!

Report Print Kumar in சமூகம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கலைமகள் மகா வித்தியாலயத்தில் கல்வி பயிலும் வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று நடைபெற்றுள்ளது.

புலம்பெயர் உறவுகள் மற்றும் பிறண்டினா அமைப்பு இணைந்து இந்த கற்றல் உபகரணங்களை வழங்கிவைத்தனர்.

பாடசாலை அதிபர் எஸ்.கணேசமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர் இராகுலநாயகி பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

சிறப்ப அதிதியாக பட்டிருப்பு வலய உதவிக்கல்வி பணிப்பாளர் ரி.நடேசமூர்த்தி, போரதீவுப்பற்று தோட்டக்கல்வி அதிகாரி எஸ்.அருள்ராஜா, பிரண்டினா அமைப்பின் கிழக்கு மாகாண முகாமையாளர் பி.ஏ.அஜித்சிறி, த.யோகராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மிகவும் பின்தங்கிய பகுதியான போரதீவுப்பற்று பிரதேசத்தில் அதிகளவான வறிய மாணவாகள் பாடசாலை கல்வியை மேற்கொண்டுவரும் நிலையில் இந்த உதவிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

Latest Offers