பச்சிலைப்பள்ளி மாற்றுவலுவுள்ள குழந்தைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

Report Print Arivakam in சமூகம்

தமிழர் நலன்புரிச் சங்கத்தினரின் நிதி அனுசரனையில் பச்சிலைப்பள்ளி பிரதேச நிர்வாக எல்லைக்குள் இயங்கும் மாற்று வலுவுடைய பிள்ளைகளுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோர் சங்கத்தினால் ஒழுங்கமைக்கப்பட்ட இந்நிகழ்வு பளை நகரத்தில் அமைந்துள்ள பச்சிலைப்பள்ளி தவிசாளரின் அலுவலகத்தில் கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோர் சங்கத்தின்தலைவர் ஜெகுமார் தலைமையில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வில் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன் மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உறுப்பினர்களான த.ரமேஸ், கி.வீரவாகு தேவர் மற்றும் மாற்று வலுவுடையோர் சங்க உறுப்பினர் சுமன், ரெஜி ஆகியோருடன் பயனாளிகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Latest Offers