இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை! மாணவியின் மகத்தான கண்டுபிடிப்பு!

Report Print Vethu Vethu in சமூகம்

இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைக்கு பாடசாலை மாணவி ஒருவர் வித்தியாசமான கண்டுபிடிப்பு ஒன்றில் ஈடுபட்டுள்ளார்.

தருஷி விதுஷிக்கா ராஜபக்ச என்ற 17 வயதான மாணவி சுற்றுச் சூழலுக்கு நெருக்கமான பை ஒன்றையே தயாரித்துள்ளார்.

இலங்கையில் பிளாஸ்டிக் மற்றும் பொலீத்தின் பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது.

இந்நிலையில் குறித்த மாணவியின் கண்டுபிடிப்பு அந்த பிரச்சினையை தீர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாளாந்தம் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பொலீத்தின் பைகள் வீசப்படுவதாகவும் அதனை கட்டுப்படுத்துவதற்கு அவர் தீர்மானித்துள்ளார்.

அதற்கமைய துணி வகை ஒன்றின் உதவியுடன் அவர் இந்த பையை தயாரித்துள்ளார்.

அந்த பையை சிறிது காலம் பயன்படுத்திய பின்னர் சூரிய ஒளி ஊடாக அழிந்து போய்விடும் எனவும் அது சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் தருஷி தெரிவித்துள்ளார்.

மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த தருஷி பல்வேறு கண்டுபிடிப்புகளின் ஊடாக சாதிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

அவரது கண்டுபிடிப்பை பிபிசி உலக சேவை பாராட்டி அவரது கற்கை நடவடிக்கைகளுக்கு புலமை பரிசில் ஒன்றை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்து.

Latest Offers