உயிரிழந்த நண்பனுக்காக கதறி அழும் நட்பு! வெளிநாட்டவரின் செயலால் சோகத்தில் ஆழ்ந்த மக்கள்

Report Print Jeslin Jeslin in சமூகம்

வெலிகம - கப்பரதொட கடலில் நீராட சென்று நேற்று பிற்பகல் காணாமல் போன வெளிநாட்டவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று முற்பகல் குறித்த வெளிநாட்டவரின் சடலம் கடலில் மிதந்துக்கொண்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

23 வயதுடைய நோர்வே நாட்டை சேர்ந்த குறித்த இளைஞர் , மேலும் மூன்று வெளிநாட்டவர்களுடன் கடலுக்கு நீராட சென்ற போது இந்த அனர்த்தத்துக்கு முகங்கொடுத்துள்ளார்.

பின்னர் , மிரிஸ்ஸ கடற்படை முகாம் மற்றும் கடலோர பாதுகாப்பு படை அதிகாரிகள் இணைந்து குறித்த நபரை தேடியுள்ள போதும் அவரின் உடல் கண்டுபிடிக்கப்படவில்லை.

இவ்வாறு உயிரிழந்த இளைஞர் உள்ளிட்ட குழுவினர் கடந்த டிசம்பர் மாதம் 29ஆம் திகதி இலங்கைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை , மீட்கப்பட்டு கரைக்கு கொண்டு வரப்பட்ட தனது நண்பரின் சடலத்தின் அருகில் படுத்து அவருடன் வந்த வௌிநாட்டு இளைஞரொருவர் அழும் காட்சி அங்கிருந்த அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியிருந்தது.

Latest Offers