மாணவன் - மாணவிக்கு இடையில் மோதல்! கத்தியால் குத்தியமையால் பெரும் பரபரப்பு

Report Print Vethu Vethu in சமூகம்

தென்னிலங்கையில் பாடசாலை மாணவி ஒருவரை சக மாணவன் கத்தியால் குத்தி காயப்படுத்தியமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஹிக்கடுவ, எகொடகொட பிரதேசத்தின் காட்டுக்குள் 11 வயது மாணவியை, 15 வயதான பாடசாலை மாணவன் கத்தியால் குத்தியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று பிற்பகல் கத்தி குத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

கத்தி குத்து சம்பவத்தில் காயமடைந்த மாணவி காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த மாணவன் மற்றும் மாணவி எகொடகொட பிரதேசத்தில் எதிர் வீடுகளில் வசித்து வந்துள்ளனர்.

இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தகராறு முற்றிய போது மாணவி கத்தி கூச்சலிட்டுள்ளார்.

கோபமடைந்த மாணவன் மாணவியின் கழுத்தில் கத்தியால் குத்தியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபரான பாடசாலை மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Latest Offers