கொழும்பின் புறநகர் பகுதியில் ஏற்பட்ட பதற்றம்! அதிரடி படையினர் குவிப்பு

Report Print Vethu Vethu in சமூகம்

கொழும்பின் புறநகர் பகுதியான பாணந்துறையில் நேற்று இரவு முதல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பிற்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பாணந்துறை, கெசெல்வத்தை, தொட்டவத்தை பிரதேசத்தில் நேற்று மாலை ஏற்பட்ட பதற்றத்தையடுத்து இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஹெல்மட் இன்றி மோட்டார் சைக்கிளில் பயணித்த நபருக்கு அபராத பத்திரம் ஒன்றை வழங்குவதற்கு பொலிஸ் அதிகாரி நடவடிக்கை மேற்கொண்டார்.

இந்த சந்தர்ப்பத்தில் மத வழிப்பாட்டு ஸ்தலத்தில் இருந்த சிலர் எதிர்ப்பு வெளியிட்டதனை தொடர்ந்து பதற்ற நிலைமை ஏற்பட்டுள்ளது

பதற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers