கொழும்பில் ஐயப்ப சாமி கருப்பன்ன பூஜையில் மகிந்த

Report Print Sinan in சமூகம்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொழும்பில் நடைபெற்ற ஐயப்ப சாமி கருப்பன்ன பூஜையில் கலந்து கொண்டுள்ளார்.

கொழும்பு - விவேகானந்த சபை மண்டபத்தில் நேற்று குறித்த பூஜை நடைபெற்றிருந்தது.

இதன்போது பூஜைகள் மற்றும் ஆராதனைகள் ஐயப்பதாச குருக்கள் தலைமையில் நடைபெற்றிருந்தன.

இந்த நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி பூஜையில் கலந்து கொண்டிருந்தார். அவருக்கு இதன்போது பொன்னாடை போர்த்தப்பட்டதுடன், பரிவட்டமும் கட்டப்பட்டுள்ளது.

இதில் பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers