இருவரின் உயிரைப் பறித்த கன்டெயினர் வாகனம்

Report Print Manju in சமூகம்

நீர்கொழும்பு - கொழும்பு பிரதான வீதியில் ஜாஎல- வெலிகம்பிட்டிய சந்தியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

கன்டெயினர் வாகனத்தின் சாரதிக்கு வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால் வாகனம் வீதியை விட்டு விலகி தடம்புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

அந்த நேரத்தில் அங்கு நிறுத்தி வைக்கப்பட்ட லொறியில் கன்டெயினர் மோதியுள்ளது. இவ்விபத்தில் கன்டெயினர் வாகனத்தின் உதவியாளரும் வீதியால் பயணம் செய்த நபரொருவரும் உயிரிழந்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர்கள் மொரவக்க பல்லேகந்த மற்றும் காலி பாலட்டுவ பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் எனவும் 32 மற்றும் 23 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் படுகாயமடைந்த வாகன சாரதி தற்போது ராகம மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

Latest Offers