மைத்திரிக்கு எதிராக ஒன்றிணையும் சுதந்திர கட்சி உறுப்பினர்கள்!

Report Print Steephen Steephen in சமூகம்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து நீக்கும் நடவடிக்கையில் மாற்று குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இந்தக் குழுவில், 19 நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் ஆளுநர்கள் மூவர் மற்றும் 54 தொகுதி அமைப்பாளர்கள் இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் பேரில் இயங்கும் அமைப்புக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பலர் ஆதரவளித்துள்ள்ளதாக தெரியவருகிறது.

வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரேவின் வீட்டில் இது சம்பந்தமாக பல கூட்டங்கள் நடந்துள்ளன.

மாகாண சபை உறுப்பினர்களை இந்த குழுவில் இணைந்து கொள்வது தொடர்பில் தொகுதி அமைப்பாளர்கள் அடங்கிய குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பணிகளில் இருந்து விலகியிருக்கும் அந்த கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களின் உதவியும் பெறப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் மைத்திரி அணியை சேர்ந்த 24 நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 6 பேர் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி அரசாங்கத்துடன் இணைந்துள்ளனர்.

மைத்திரி தரப்பில் எஸ்.பி.திஸாநாயக்க, தயாசிறி ஜயசேகர, திலங்க சுமதிபால உள்ளிட்ட சிலர் உள்ளனர்.

Latest Offers