திருகோணமலையில் மான்களுக்கான உறைவிடம், உணவகம்

Report Print Abdulsalam Yaseem in சமூகம்

திருகோணமலை பெடெரிக் கோட்டைக்கு அருகில் மான்களுக்கான உணவகம், உறைவிடம் மற்றும் தண்ணீர் வசதிகளுடன் கூடிய தொட்டில் என்பன வைபவ ரீதியாக இன்று திறந்து வைக்கப்பட்டுள்ளன.

குறித்த நிகழ்வில் அருட் தந்தை லக்ஷ்மன் பீரிஸ், நகரசபை தலைவர் மற்றும் திருகோணமலை நகரமும் சூழலும் பிரதேச சபையின் தலைவர் ஞானகுணாளன், பிரதேச சபை செயலாளர் அருள்ராஜ், நகரசபை உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இங்கு மான்களுக்கு நீர் கிடைக்கக்கூடிய வகையில் நீர் தாங்கி அமைக்கப்பட்டுள்ளதுடன், உணவு வழங்கப்பட சீமெந்து தரையும் அமைக்கப்பட்டுள்ளது.

Latest Offers