கிடைத்த உதவியால் இரண்டு மாதங்கள் வாழ முடியும்! மகிழ்ச்சியில் குடும்பஸ்தர்

Report Print Dias Dias in சமூகம்

வீதிகளில் இருந்த தண்ணீர் சேறுகளை பார்க்காமல் சிரமத்தின் மத்தியில் எங்களுக்கு உதவி செய்த ஐ.பி.சி வலையமைப்பிற்கு நன்றி தெரிவிப்பதாக ஐ.பி.சி வலையமைப்பினூடாக நிவாரணப் பொருட்களை பெற்றுப் பயன் அடைந்த கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பஸ்தர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

ஐ.பி.சி வலையமைப்பினால் எங்கள் வீடு தேடி வந்து நிவாரணப் பொருட்கள் தந்தமைக்கு நன்றி. இந்த பொருட்கள் இரண்டு மாதத்திற்கு எங்கள் பிள்ளைகளுக்கு போதுமானது.

ஐ.பி.சி வலையமைப்பிற்கு எனது மனைவி, பிள்ளைகள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்றைய தினம் ஐ.பி.சி வலையமைப்பினால் ஐந்தாம் கட்டமாக நிவாரணப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதில் பலர் நிவாரணப் பொருட்களைப் பெற்று பயனடைந்துள்ளனர்.

Latest Offers