கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெளிநாட்டவர் இருவர் கைது

Report Print Steephen Steephen in சமூகம்

போலி விசாவை பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயற்சித்த இரண்டு சோமாலியர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் போலி சுவிடன் விசாவில் இந்தியாவின் புதுடெல்லி வழியாக சுவிடன் செல்ல முயற்சித்துள்ளார். மற்றைய நபர் அவருக்கு உதவி செய்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சோமலியர்கள் 19 மற்றும் 22 வயதானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பம உள்ளதுடன் கட்டுநாயக்க பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Latest Offers