வவுனியாவில் மாணவர்களுக்கான பாதணி வழங்குவதற்கான பரிசுப் படிவம் விநியோகம்

Report Print Thileepan Thileepan in சமூகம்

வவுனியா தெற்கு வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான பாதணி வழங்குவதற்கான பரிசுப் படிவம் பாடசாலைகள் ஊடாக வழங்கப்பட்டு வருகின்றது.

இலவசக் கல்வித் திட்டத்தை சிறப்பாக முன்னெடுக்கும் பொருட்டு அரசாங்கத்தால் இலவச பாடநூல், இலவச சீருடை விநியோகம் என்பவற்றைத் தொடர்ந்து இலவச பாதணி வழங்குவதற்கான பரிசுப் படிவம் வழங்கப்பட்டு வருகின்றது.

அதற்கமைவாக வவுனியா தெற்கு வலயப் பாடசாலைகளில் மாணவர்களுக்கான பாதணி பரிசுப் படிவம் தற்போது வழங்கப்பட்டு வருகின்றது.

1400 ருபாய் மற்றும் 1500 ரூபாய் பெறுமதியில் இப் பரிசுப் படிவம் மாணவர்களின் வகுப்புக்கு ஏற்ற வகையில் வழங்கப்பட்டு வருகின்றது.

Latest Offers