பாடசாலை மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளித்த பரிசுப் பொதிகள்

Report Print Dias Dias in சமூகம்

எமது பாடசாலை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு அவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கியமைக்காக ஐ.பி.சி தமிழ் வலையமைப்பிற்கு எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கிளிநொச்சி, பிரமந்தனாறு மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

எமது பாடசாலைக்கு தொலைக்காட்சி ஒன்று இன்றியும், எமது பாடசாலையிலிருந்து போட்டிக்கு செல்லும் மாணவர்கள் போக்குவரத்து வசதியின்றியும் உள்ளதால் அவஸ்தை படுகின்றோம். அதனால் அவர்களுக்கு தொலைக்காட்சியையும் போக்குவரத்து வசதியையும் வழங்குமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.

ஐ.பி.சி தமிழ் வலையமைப்பினூடாக நேற்று முன்னெடுக்கப்பட்ட நிவாரணப் பணியின் மூலம் பலர் பயனடைந்துள்ளதுடன் தமது கோரிக்கைகளை இதன் போது முன்வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers