கிளிநொச்சியில் வீடுகளை சீர் செய்யும் பணி முன்னெடுப்பு

Report Print Yathu in சமூகம்

கிளிநொச்சியில் வெள்ளத்தால் சேதமடைந்த வீடுகளை சீர் செய்யும் பணிகள் இலங்கை பொதுஜன பொறியியல் முன்னணியினரால் இன்று முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி, மருதநகர் பகுதியில் வெள்ளத்தால் சேதமாகிய வீடுகளை புனரமைக்கும் பணியில் பொறியியலாளர்கள் உள்ளிட்ட குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது சேதமாகிய வீடுகள் புனரமைக்கப்பட்டதுடன், மின்சார வசதிகளும் மீள ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை நாளை குறித்த பணிகள் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெறவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Latest Offers