வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப உதவிய அதிகாரிகள்

Report Print Mohan Mohan in சமூகம்

முல்லைத்தீவில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்ட பிலக்குடியிருப்பு கிராமத்தில் வசிக்கும் 7 குடும்பங்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் இன்று வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார அழிவு தொடர்பிலான விபரங்களும் கிராம சேவையாளர் ஊடாக இன்று திரட்டப்பட்டுள்ளதுடன் மேலும் சில உதவிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

வெள்ளம் காரணமாக பிலக்குடியிருப்பு கிராமத்தில் வசிக்கும் விவசாயிகளின் வாழ்வாதரப் பயிர்செய்கைகளும் கால்நடைப் பண்ணையாளர்கள் உள்ளிட்டோர் அதிகம் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இதன்காரணமாக பெரும் பொருளாதார நெருக்கடியினை சந்தித்திருந்த பிலக்குடியிருப்பு கிராம மக்கள அரச அதிகாரிகள் தமது கிராமத்தை நேரில் வந்து பார்வையிட்டு மீண்டும் தமது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப உதவி செய்யவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று உதவிகள் வழங்கப்பட்டு வாழ்வாதார அழிவுகள் தொடர்பிலான விபரங்கள் திரட்டப்பட்டுள்ளன.

Latest Offers