பதினைந்து இலட்சத்தை மோசடி செய்தவருக்கு விளக்கமறியல்

Report Print Mubarak in சமூகம்

திருகோணமலையில் பதினைந்து இலட்சம் ரூபாய் பணத்தினை மோசடி செய்த நபர் ஒருவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் சமிலா குமாரி ரத்நாயக்க உத்தரவிட்டுள்ளார்.

திருகோணமலை நகரில் வியாபார நிலையங்களுக்கு பொருட்கள் உணவுப் பொருட்கள் விநியோகித்து வந்த நிலையிலே மூன்று கடைகளில் பொருட்கள் தருவதாக கூறி பதினைந்து இலட்சம் ரூபாயினை பெற்று தலைமரைவாகியுள்ளார்.

இந்நிலையிலே கடை உரிமையாளர்கள் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமைய கைது செய்து பொலிஸார் திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ( வாசஸ்தலத்தில்) ஆஜர்படுத்தினர்.

இதனை விசாரித்த நீதிபதி சந்தேகநபரை இம்மாதம் 14 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

திருகோணமலை, சங்கமம் பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Latest Offers