குமார் பொன்னம்பலத்தின் நினைவு தின நிகழ்வு

Report Print Thileepan Thileepan in சமூகம்

ஜி. ஜி. பொன்னம்பலத்தின் மகனான காலஞ்சென்ற குமார் பொன்னம்பலத்தின் 19ஆம் ஆண்டு நினைவு தினமும் மென்பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டியும் இடம்பெற்றுள்ளது.

வவுனியா - கனகராயன்குளம், பொது விளையாட்டு மைதானத்தில் இன்று தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் விளையாட்டுத் துறையின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்நிகழ்வில் ஈகைச்சுடரினை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஏற்றி வைத்ததுடன், குமார் பொன்னம்பலத்தின் திருவுருவப்படத்திற்கு தேசிய அமைப்பாளர் மணிவண்ணன் மலர் மாலையை அணிவித்துள்ளார்.

இதனையடுத்து நிகழ்வில் கலந்து கொண்டவர்களும் கிரிக்கட் போட்டியில் பங்கேற்கும் விளையாட்டுக் கழகங்களின் வீரர்களும் அன்னாருக்கு மலர் அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

தொடர்ந்து குமார் பொன்னம்பலம் ஞாபகார்த்த மென்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டி ஆரம்பமானது.

Latest Offers